காவிரி ஆற்றில் மேகதாது அணை…!கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் …!
காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்பித்தது.
இந்த அணை கட்டுவது தொடர்பாக கூறும் கர்நாடக பெங்களூரு மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக காவிரியின் குறுக்கே மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக கூறி வருகிறது.
இந்தத் திட்டம் மட்டும் நடைமுறைப்படுத்தபட்டால் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டும் நீரின் அளவு அதிகளவு குறையும் வாய்ப்பு உள்ளது இந்த அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் சார்பில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மேகதாது அணை தொடர்பான அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு சமர்ப்பித்தது. இந்த திட்டத்தை ரூ.5000 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் காவிரி ஆற்றில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக அணை கட்டுவது தொடர்பாக தமிழகம் மற்றும் கேரள அரசுகளை தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மத்திய நீர்வள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.