தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை தீவிரமடைந்துள்ளது. இரு மாநிலங்களிலும் விவசாய அமைப்புகள் , மற்ற மாநில அமைப்புகள் போராடி வருகின்றன. போதிய தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அமைப்புகளும், தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்று கன்னட அமைப்புகளும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
முன்னதாக காவிரி ஒழுங்காற்று மையம் தமிழகத்திற்க்கு வினாடிக்கு 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நடந்த காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் காவிரி ஒழுங்கற்று பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து தான் சமீபத்தில் டெல்லியில் காவேரி மேலாண்மை வாரியம் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு வினாடிக்கு 12500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், கர்நாடக அதிகாரிகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியதால் இரு மாநில அதிகாரிகள் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
இறுதியில், இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி தண்ணீரை வரும் அக்டோபர் 15 வரையில் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது, அது தான் எங்கள் நிலைப்பாடு, இதுதொடர்பாக சட்ட போராட்டம் நடத்துவோம் என முதலமைச்சர் சித்தராமையா கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 3,000 கன அடி தண்ணீர் திறக்ககோரிய உத்தரவை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று காவிரி ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்துள்ளது. தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க முடியாத சூழலில் இருக்கிறோம் என கர்நாடக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகாவின் கருத்தை கருத்தில் கொள்ளாமல் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…