கர்நாடக தேர்தல்.! காங்கிரஸ் முக்கிய தலைவர்களை குறிவைக்கும் பாஜக நட்சத்திர வேட்பாளர்கள்.!
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் ஷிகாரிபூரில் எடியூரப்பாவின் மகன் போட்டியிடுகிறார்.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தால் வரும் மே மாதம் 10ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தற்போது பாஜகவும் தங்கள் தரப்பு முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வாரிசுகளுக்கு வாய்ப்பு :
இதில், 189 வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முக்கிய தலைவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் கர்நாடகாவின் ஷிகாரிபூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. மேலும், நட்சத்திர வேட்பாளர்களாக முதல்வர் பசவராஜ் பொம்மை ஷிகாவ்ன் சட்டமன்றத் தொகுதியிலும், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி சிக்மகளூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
பாஜகவால் களமிறக்கப்படும் பலம் வாய்ந்த வேட்பாளர்களின் பட்டியல் இங்கே:
முதல்வர் பசவராஜ் பொம்மை – ஷிக்கான் தொகுதி
பி.எஸ்.விஜயேந்திரா- ஷிகாரிபுரா தொகுதி
சி.டி.ரவி- சிக்மகளூர் தொகுதி
ரமேஷ் ஜார்கிஹோலி- கோகாக் தொகுதி
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் கே – சிக்கபல்லாபூர் தொகுதி
டாக்டர் அஸ்வத்நாராயண் சிஎன் – மல்லேஸ்வரம் தொகுதி
ஆர்.அசோகா, பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்
வி.சோமன்னா – சாமராஜநகர் தொகுதி மற்றும் வருணா தொகுதி
பி.ஸ்ரீராமுலு – பெல்லாரி ரூரல் தொகுதி