பள்ளிகள் திறப்பது குறித்து ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என கர்நாடக கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரானா தொற்று பாதிப்பினால் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 வரையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தபடுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அந்த ஞாயிற்றுக் கிழமைகளில் அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற எதற்கும் பொதுமக்கள் வெளியே வர கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது அவர், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகள் எப்போது தொடங்கலாம் எனவும், எவ்வாறு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம் எனவும் ஆராய நிபுணர் குழு அமைத்துள்ளோம். அந்த குழு அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.’ என தெரிவித்தார்.
தற்போது கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். பள்ளிகளை செப்டம்பருக்கு பின்னர் தொடங்குங்கள் என்பதே பெற்றோர்களின் கருத்தாக உள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…