மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு.
மேகதாது அணை விவகாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார். இதற்கு அனைவரும் ஒப்புதல் அளிக்கவே சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையில், கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக சட்டசபையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு புறம்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் உரிமையை ஆக்கிரமிக்கலாம் என்பது மக்கள் விரோத முடிவு. இந்த முடிவை கர்நாடக அரசும்,மக்களும் வன்மையாகக் கண்டிக்கின்றனர் என பதிவிட்டார்.
இந்நிலையில்ம், மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்க்கு கண்டனம் தெரிவித்து கர்நாடகா பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது ஆதவ் அர்ஜுனா பேசிய…
டெல்லி : நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பட்ஜெட்டுக்கான கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில், குடியரசுத் தலைவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை…
டெல்லி : 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று நாடாளுமன்றத்தின்பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி…
சென்னை : இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெறும் நடிகைகளில் முன்னணியில் பிரியங்கா சோப்ரா தான் இருக்கிறார். தமிழ் சினிமாவில்…
சென்னை : நாடாளுமன்றத்தின் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. முதலில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை…