கர்நாடகாவில்,கொரோனா தொற்று பரவுதல் அச்சம் காரணமாக உதவிக்கு யாரும் வராததால் பெண் ஒருவர் நடுரோட்டில் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம்,கோலார் மாவட்டத்தில் வசித்து வந்த பெண்(வயது 50) ஒருவர்,கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.இதனையடுத்து,நேற்று காலை மருத்துவமனைக்கு புறப்பட்டு செல்லும் வழியில் திடீரென்று மயங்கி விழுந்தார்.கொரோனா தொற்று பாதித்திருக்கும் என்பதால் அப்பெண்ணுக்கு உதவி செய்ய ஒருவர் கூட முன்வரவில்லை.அதற்குப் பதிலாக ரோட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்நிலையில்,எந்தவித உதவியும் கிடைக்காததால் அப்பெண் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.அதன்பின்னர்,இதைப்பற்றிக் கேள்விப்பட்ட தாசில்தார் மஞ்சுநாத் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஞ்சாயத்து மற்றும் போலீசார் உதவியுடன் உடலை மீது அடக்கம் செய்தார்.மேலும்,மக்களிடம் உள்ள மனித நேயம் முழுவதும் செத்துவிட்டது என்று தாசில்தார் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…