கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஆர்.துருவநாராயணா மாரடைப்பால் காலமானார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் எம்பியுமான ஆர் துருவநாராயணா மாரடைப்பால் இன்று காலமானார். கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ஆர்.துருவநாராயணா அவர்களுக்கு காலை நெஞ்சுவலி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
பின்னர் அவரது கார் டிரைவர் அவரை மைசூருவில் உள்ள டிஆர்எம்எஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக துருவநாராயணா உயிரிழந்தார். தனது 61வது வயதில் உயிரிழந்த ஆர்.துருவநாராயணா அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
“முன்னாள் எம்.பி., திரு.ஆர்.துருவநாராயணனின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. கடின உழைப்பாளி மற்றும் தாழ்மையான அடிமட்டத் தலைவர், அவர் இந்திய தேசிய மாணவர் சங்கம் (NSUI) மற்றும் இளைஞர் காங்கிரஸின் தரவரிசையில் உயர்ந்த சமூக நீதிக்கான ஒரு சாம்பியனாக இருந்தார். அவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.
“சொல்ல முடியாத அதிர்ச்சியும் வருத்தமும். முன்னாள் எம்பியும், கேபிசிசி செயல் தலைவருமான ஆர்.துருவநாராயணா ஜி போன்ற தலைவரை இழந்து என் இதயம் உடைகிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும். எனது ஆதரவும் பிரார்த்தனையும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உண்டு” என்று இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் ஸ்ரீனிவாஸ் பி.வி. ட்வீட் செய்துள்ளார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…