எம்.எல்.ஏ நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருகிறார் – கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

கர்நாடகா அரசியல் களம் தற்போது பரபரப்பாக இயங்கி வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்களது ராஜினாமாவை அளித்தனர்.இதனால் ஆளும் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களில் ஒருவரான நாகராஜ் என்பவரை காங்கிரஸ் மூத்த தலைவரும்,கர்நாடக மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சருமான சிவக்குமார் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருவதாக உறுதி தந்துள்ளார் என்று தெரிவித்தார். இதன் பின்னர் எம்.எல்.ஏ நாகராஜ் கூறுகையில், நான் ராஜினாமாவை வாபஸ் பெற இருக்கிறேன்.பல ஆண்டுகள் நான் காங்கிரசில் இருந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025