கர்நாடக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் வெட்டிக் கொலை.! 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை.!
கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றும் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த முக்கிய காங்கிரஸ் பிரபலம் ஸ்ரீநிவாசன், நேற்று கோலார் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
நேற்று கோலார் பகுதியில் அவருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த ஹோட்டல் கட்டுமான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளார். அந்த சமயம் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீநிவாசன் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து விட்டனர்.
ஹிஜாப் அணிந்து மாணவிகள் தேர்வு எழுதலாம்.! கர்நாடக அரசு முடிவு.!
ரத்த வெள்ளத்தில் இருந்த ஸ்ரீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஜலப்பா மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்ரீநிவாசன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் இன்று 3 பேரை கைது செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், காவலர்கள் மஞ்சுநாத் மற்றும் நாகேஷ் ஆகியோர் தலைமையிலான குழு குற்றவாளிகளை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து காவலர்களும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் முதன்மை குற்றவாளிகளான வேணுகோபால் மற்றும் மணிந்திரா ஆகியோருக்கு காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டன. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தோஷும் காயமடைந்தார்.
கோலார் காவல் கண்காணிப்பாளர் எம்.நாராயண் கூறுகையில், ” இந்த கொலை சம்பவமானது அரசியல் மற்றும் தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கையாக இருக்கலாம் என்றும், முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் பயங்கர ஆயுதங்கள் அடங்கிய பை கண்டுபிடிக்கப்பட்டது. என்றும், தாக்குதலின் போது ஸ்ரீனிவாஸ் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளர்.