நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.எனினும்,முன்னதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பலரும் இறந்துள்ளனர்.இதனால், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு வகையில் நிவாரணங்களை வழங்கி வருகிறது.
இந்நிலையில்,வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை,எளியோர்களில் வேலைக்கு செல்பவர்கள்,கொரோனாவால் இறந்தால் அவரது குடும்பத்தினர்க்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மேலும்,சுமார் 25,000 முதல் 30,000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க மாநில நிதித்துறைக்கு கிட்டத்தட்ட ரூ.250 கோடி முதல் 300 கோடி வரை செலவாகும் என்றும் முதல்வர் கூறினார்.
கர்நாடகாவில்,நேற்று 7,810 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும்,125 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…