கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடகா முதல்வராக உள்ள 78 வயதான எடியூரப்பாவுக்கு பாஜகவில் கடும் எதிர்ப்பு உள்ளது.காரணம்,அவர் தனது மகன் விஜயேந்திராவுவை அடுத்த அரசியல் வாரிசாக,துணை முதல்வர் பதவிக்கு கொண்டு வர முயல்வதாகவும்,கட்சி நிர்வாகிகளை சரிவர கவனித்துக் கொள்வதில்லை எனவும்,மேலும் முக்கியமான ஆலோசனைகளில் கட்சி நிர்வாகிகளை அனுமதிக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
எதிர்ப்பு:
மேலும்,கர்நாடக சுற்றுலா துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்.எல்.ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் பகிரங்கமாக ஊடகங்களிலும்,பொது மேடைகளிலும் எடியூரப்பாவை விமர்சித்தனர்.மேலும்,எடியூரப்பாவுக்கு 78 வயது ஆகிவிட்டதால் முதல்வர் பதவியில் இருந்து மாற்றவேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர்.ஏனெனில்,கட்சி விதிகளின்படி,75 வயது ஆனவர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக,எடியூரப்பாவை மாற்றுவது என பாஜக மேலிடம் தீர்மானித்ததாக தகவல் வெளியானது.
பிரதமரை சந்திப்பு:
அதற்கேற்ப,கடந்த வாரம்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா,ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை நேரில் சந்தித்தார்.இதனால்,அவர் பதவி விலகுவது உறுதியானது.
இதனால்,அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் இறங்கினர்.அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்தார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது,”பாஜகவின் உண்மையாக தொண்டனாக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். இதனால் கட்சி தொண்டர்கள் யாரும் மரியாதைக் குறைவான போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்”, என்று தெரிவித்தார்.
அடுத்த முதல்வர் யார்?:
இதனிடையே,முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தால் அடுத்த முதல்வர் யார் என்கிற விவாதத்தில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பசவராஜ் பொம்மை, சி.டி.ரவி உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபட்டன.
ராஜினமா:
இந்நிலையில்,கர்நாடக முதல்வர் எடியூரப்பா தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”கர்நாடகாவில் எனது தலைமையிலான அரசு பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் முடிவடைகிறது.இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலக நான் முடிவு செய்துள்ளேன்.மேலும்,இன்று மதியம் ஆளுநரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளேன். மேலும்,அடுத்த தேர்தலில் பாஜக கட்சி ஆட்சியை பிடிக்க கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.எனவே, அனைவரும் எனக்கு ஒத்துழைப்ப அளிக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…