29-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்-கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா

இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா 4 வது முறையாக பதவி ஏற்றார். இதன் பின்னர் கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், எக்காரணத்தைக் கொண்டும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டேன் . இன்னும் 5 மாதத்தில் எனது தலைமையிலான அரசு, மற்றும் முந்தைய அரசின் சாதனைகள் என்ன என்பது குறித்து காட்ட வேண்டிய அவசியம் எனக்கு உள்ளது.
யாரு தவறு செய்திருந்தாலும் மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் கொண்டவன் நான்.பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் பாஜக தொண்டர்கள் ஆகியோரின் ஆசிர்வாதத்தால் தற்போது பதவியேற்றுள்ளேன்.
எனது முதல் பணி விவசாயிகளின் நலன் மற்றும் அவர்களது கஷ்டங்களை போக்குவது குறித்து தான்.வருகின்ற 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025