கர்நாடக முதலமைச்சர் பதவி ராஜினாமா? – எடியூரப்பா விளக்கம்!!

Default Image

கர்நாடகா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, எடியூரப்பா விளக்கம்.

கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை தொடர்பாக இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றுள்ளார். இன்று காலை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோரை சந்தித்துள்ளார். இதன்பின் டெல்லியில் உள்ள கர்நாடக இல்லத்தில் முதல்வர் எடுயூரப்பா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது, கர்நாடக மாநிலத்தில் முதல்வர் விரைவில் மாற்றப்படுவார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகிறது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து நீங்கள் ராஜினாமா செய்ய போகிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ராஜினாமா என்ற பேசக்கே இடமில்லை, என்னை யாரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்கவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, நான் ராஜினாமா செய்ய போவதில்லை, கட்சியை பலப்படுத்தி மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான ஆலோசனை நடத்தத்தான் டெல்லி வந்துள்ளேன். முதலமைச்சர் பதவி குறித்து வரும் தகவல் அனைத்தும் வதந்திகளே தவிர, அதில் உண்மையில்லை எனவும் குறிப்பிட்டர்.

மேலும் இன்று மாலை மத்திய பாஜக அமைச்சர்கள் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய அமைச்சர்களை சந்தித்துவிட்டு பெங்களூர் புறப்பட உள்ளேன் எனவும் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கர்நாடகாவில் பாஜக நிலைப்பாடு குறித்து மாதந்தோறும் டெல்லி வந்து ஆலோசனை நடத்த உள்ளேன் எனவும் தெரிவித்தார்.

கர்நாடகா மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, எடியூரப்பா விளக்கமளித்துள்ளார். இதனிடையே கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக என்றும் உடல் நிலையை காரணம் காட்டி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் தெரிவித்தாக தகவல் வெளியானது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்