கர்நாடக முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பாட்டீல், ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது. இது தவிர, நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6-ஆம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7-ஆம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11-ஆம் தேதியும், கனரகத் தொழில் துறை அமைச்சர் பாட்டீல் மார்ச் 15-ஆம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீல், ஏப்ரல் 12, 2022 அன்று உடுப்பியில் உள்ள ஒரு லாட்ஜில் உயிரிழந்து கிடந்தார். கான்ட்ராக்டர் சந்தோஷ் பாட்டீலின் மரணம் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பதவி ராஜினாமா செய்யக் கோரி, அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை நோக்கி தற்போதைய முதல்வர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் சட்டவிரோதமாக பேரணி நடத்தியதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை மோடி பார்வையிடாதது ஏன்? – ஆ.ராசா
பேரணி நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட குற்றவியல் வழக்கை ரத்து செய்யக் கோரி, முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண தீட்சித் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும், கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோருக்கு அபராதம் விதித்து, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…