கர்நாடகா முதல்வர் எடியூரப்பா இன்று பதவி விலகல்…?

எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, எடியூரப்பா அவர்கள் கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில், கர்நாடகா முதல்வராக உள்ள எடியூரப்பா அவர்கள், பதவி விலக உள்ளதாக சமீப நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து பதிலளித்த அவர், கட்சி மேலிடம் கூறினால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார். வரும் 25-ம் தேதிக்கு பிறகு பாஜக தலைமையின் வழிகாட்டுதல் படி செயல்படுவேன் என்று தெரிவித்திருந்தார்.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரையில், 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு கட்டாய ஒய்வு அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 78 வயதை எட்டியுள்ள எடியூரப்பா அவர்கள், 2 ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எடியூரப்பா அவர்கள், கர்நாடகா முதல்வராக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, இன்று அவர் பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!
April 24, 2025
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025