தொழிலதிபர் தற்கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.! கர்நாடகா முதல்வர் மறுப்பு.!
பெங்களூரு தொழிலதிபர் தற்கொலை விவகாரத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நேற்று புத்தான்டு அன்று 47 வயதான தொழிலதிபர் பிரதீப் என்பவர் காருக்குள் தனது துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த மரணம் தொடர்பாக அவர் எழுதிய குறிப்பேட்டில் பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி உள்பட மேலும் 5 பேர் பெயர்கள் இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் காலையில் வெளியாகி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், இது சிவில் விவகாரம். போலீசார் இந்த தற்கொலை விவகாரத்தை பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முறையாக FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ தான் ஒன்றும் செய்யவில்லை என பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலி தன்னை நிரூபித்து வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’ என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.