பாஜக எம்எல்ஏக்களை கட்சியில் சேர சொல்லி கெஞ்சும் காங்கிரஸ்.! கர்நாடக முதல்வர் குற்றசாட்டு.!
காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் ஜனதா தளம் கட்சியினர் இடையே ஒப்பந்தம் போட்டுள்ளார் என கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் எனவும், மே 13இல் முடிவு வெளியிடப்படும் எனவும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்தல் பணிகளை பிரதான காட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
காங்கிரஸ் – ஜனதா தளம் :
இந்த தேர்தல் குறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், காங்கிரஸ் மற்றும் குமாரசாமியின் ஜனதா தளம் கட்சி இந்த தேர்தல் சம்பந்தமாக ஒப்பந்தம் போட்டுள்ளனர் என்றும், எங்கள் பாஜக எம்எல்ஏக்களை காங்கிரசில் சேர சொல்லி காங்கிரஸ் கட்சினர் கெஞ்சுகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
ஜனதா தளம் மறுப்பு :
இதற்கு பதில் அளிக்கும் விதமாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் எச்.டி.குமாராசாமி, நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை. 224 தொகுதிகளிலும் ஜனதா தளம் தனித்தே களம் காணும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.