கர்நாடக; 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவையில் ஒப்புதல்!
கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவையில் ஒப்புதல்.
பெங்களுருவில் பிரமாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டிகே சிவகுமார் பதவியேற்று கொண்டனர். இதன்பின், கர்நாடக அமைச்சரவையில் 8 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இவர்களுக்கு கர்நாடக மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து பேசிய முதலமைச்சர் சித்தராமையா இன்றே கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் 5 முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் சித்தராமையா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 நிதியுதவி, மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்..
மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 நிதியுதவி 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என இந்த 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கர்நாடக அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேசிய சித்தராமையா, கர்நாடகாவில் நாங்கள் அளித்துள்ள 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.5,0000 கோடி தேவை. மோடி அரசால் கர்நாடகம் இழப்பை சந்தித்து வருகிறது.
மேலும், ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் அதிக வரி மத்திய அரசுக்கே செல்கிறது. கர்நாடகாவுக்கு கிடைக்கவேண்டிய நிதியை பெற பாஜக எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என குற்றசாட்டினார். இந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.