கர்நாடக மாநிலம் தார்வாட் தாலுகாவில் உள்ள கோட்டூர் கிராமத்தில், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தார்வாட் யூனிட் நிர்வாக உறுப்பினரும், கோட்டூர் கிராம பஞ்சாயத்து துணைத் தலைவருமான பிரவீன் கம்மர் என்பவர் நேற்று மர்ம நபர்களால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தார்வாட் தாலுகா எஸ்பி லோகேஷ் ஜகலாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரவீன் கம்மர் கொலை செய்யப்பட்டதாக எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது 4 பேரை கைது செய்துள்ளோம்.
அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம், முதற்கட்ட விசாரணையில் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டதன் காரணமாக பிரவீன் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கர்நாடக தேர்தல் 2023 மே 1-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த அதிர்ச்சிகரமான படுகொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், பாஜக யுவ மோர்ச்சாவின் தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யா, அரசியல் எதிரிகளால் கம்மர் கொடூரமாக கொல்லப்பட்டதாகக் கூறி, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…