கர்நாடாகாவில் 144 தடை உத்தரவு

கர்நாடகாவில் நீண்ட நாட்கள் நடைபெற்ற அரசியலில் குழப்பத்தில் குமாரசாமி ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது.எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.இதனையடுத்து எடியூரப்பா நேற்று கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றார்.
இதன் பின்னர் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா வருகின்ற 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அன்றைய தினமே நிதி மசோதா தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை அமைந்துள்ள பெங்களூர் விதான் சவுதாவை சுற்றிலும் ஜூலை 29 தொடங்கி 30 -ஆம் தேதி நள்ளிரவு வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.