கர்நாடக அரசியலில் நீடித்து வந்த அரசியல் குழப்பம் நேற்று முடிவுக்கு வந்தது. நான்கு நாட்களாக நடைபெற்று வந்த சட்டப்பேரவை விவாதங்களை தொடர்ந்து நேற்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.
நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி 6 மணிநேரம் கழித்து தான் வந்து இருந்தார். அவர் மிகவும் உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார். இந்த அரசின் ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வந்தது. எனது பதவியை விட்டு எப்போது வேண்டுமென்றாலும் விலக தயாராகத்தான் இருக்கிறேன். 2018ஆம் ஆண்டே நன் அரசியலில் இருந்து விலகி இருப்பேன். சில காரணங்களால் மீண்டும் அரசியலுக்கு வந்தேன் என தெரிவித்தார். மேலும், 6 கோடி கர்நாடக மக்களுக்கும், சபாநாயகருக்கும் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். என உருக்கமாக தனது உரையை நிகழ்த்தினார்.
பிறகு சபாநாயகர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினர். அதில் அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவாகின. அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் பதிவாகின. 20 எம்எல்ஏக்கள் வாக்கெடுப்புக்கு வரவில்லை. ஆதலால், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் – மஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து பாஜக அரசு ஆட்சி அமைக்க சபாநாயகரிடம் உரிமை கோர உள்ளது. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாதான் மீண்டும் முதல்வராக கட்சி தலைமையால் தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…