சித்தராமையாதான் எங்கள் ராஜினாமாவிற்கு காரணம் என பல்டி அடித்த அதிருப்தி எம்எல்ஏக்கள்! அதிரும் கர்நாடக அரசியல் களம்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கர்நாடகா சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மஜக கட்சி கூட்டணியில் ஆட்சி புரிந்து வந்த நிலையில் திடீரென ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த நிலையில், அதன் பிறகான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் அரசு தோற்று தற்போது எடியூரப்பா தலைமையிலான பாஜக கட்சி ஆட்சிஅமைத்துள்ளது.
இந்நிலையில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘கர்நாடக காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறித்தான் நாங்கள் ராஜினாமா செய்தோம். பாஜகவுக்கும் இந்த ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை’ என கூறிவிட்டு சென்றார்.
இதற்க்கு சித்தராமையா, ‘ எனக்கும் எம்எல்ஏக்கள் ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.’ என கூறினார்.