இன்னும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும்! சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் பதில் கடிதம்!
கர்நாடக சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என இந்திய அரசியல் வட்டாரமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. நேற்று, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ’ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் இதுவரை தன்னை வந்து சந்திக்கவில்லை. அவர்கள் நேரில் தன்னை சந்தித்து விளக்கம் கூறும் வரை அவர்களது ராஜினாமாவை ஏற்க முடியாது எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் நாளை காலை தன்னை வந்து சந்திக்க வேண்டும்’என ராஜினாமா செய்த அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தார்.
இதற்க்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் பதில் கடிதம் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், சபாநயகரை சந்திக்க இன்னும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என்பது போல அதில் [பதில் கூறப்பட்டுள்ளது.