கர்நாடக சட்டமன்ற தேர்தல் : பிரியங்கா காந்தி இன்று பிரச்சாரம்..!

Default Image

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பிரியங்கா காந்தி அவர்கள் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். 

கர்நாடகாவில் வரும் மே 10-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர்.

பிரச்சாரத்தில் ஈடுபடும் பிரியங்கா காந்தி 

PRIYANKA GANDHI

இந்த நிலையில், நேற்று ராகுல் காந்தி, அமித்ஷா ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இன்று பிரியங்கா காந்தி அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.  மேலும்,தேர்தல் பிரச்சாரத்தில், பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ள நிலையில், அங்கு தேர்தல் களம் அனல் பறக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்