கர்நாடக சட்டசபை தேர்தல்…! காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடக்கம்..!
கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.
கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்திருந்தார். இதற்காக பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சி, கடந்த மார்ச் 25-ஆம் தேதி, கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் 124 தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்த நிலையில் மீதமுள்ள 100 தொகுதிகளில் 42 தொகுதிக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
மேலும், தற்பொழுது கர்நாடக சட்டசபை தேர்தல் தொடர்பான காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் உள்ள ஏஐசிசி அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்பி. ராகுல்காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் மீதமுள்ள 58 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இந்த வாரம் இறுதியில் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகிய நிலையில், இந்த கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.