கர்நாடக சட்டமன்ற தேர்தல் : அண்ணாமலை பரப்புரைக்கு பணத்துடன் சென்றதாக காங்கிரஸ் குற்றசாட்டு…!

Default Image

கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் அண்ணாமலை சென்றதாக காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் குற்றசாட்டு. 

கர்நாடகாவில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  அதிலும், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் வந்தார் 

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் வினய்குமார் அண்ணாமலை மீது குற்றசாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கர்நாடக தேர்தல் பரப்புரைக்கு ஹெலிகாப்டரில் பணத்துடன் அண்ணாமலை சென்றதாக கூறியுள்ளார். எனக்கு வந்துள்ள தகவலின் படி அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளேன். காவல்துறையினரிடமும் புகார் அளித்துள்ளேன். எனக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி மீது நம்பிக்கை உள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன் என்ன தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை விளக்கம் 

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், எல்லோரும் அவர்களைப் போலவே கருதிகிறார்கள். நான் சாமானியன். எங்களுடைய கொள்கை வேறு, அவர்களது கொள்கை வேறு. காலவிரயத்தை தவிர்ப்பதற்காகவே ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்.

எங்கள் வெற்றி உறுதியானதால் தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். தோல்வி பயத்தால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக எங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர் என வினய்குமார் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்