கர்நாடக சட்டசபை தேர்தல்..! பாஜகவின் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

Published by
செந்தில்குமார்

கர்நாடக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக தங்கள் 3வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.  

கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது. இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தங்கள் கட்சி  வேட்பாளர்களை தேர்வுகளை செய்து அறிவித்து வருகின்றனர். ஏற்கனவே, காங்கிரஸ் கட்சி இதுவரை 166 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

அந்தவகையில், பாஜக தரப்பில் 224 தொகுதிகளில் இதுவரை 212 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தற்பொழுது, பாஜக தங்கள் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் பாஜகவில் இருந்து நேற்று விலகிய நிலையில், இன்று பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். இதனால் ஜெகதீஷ் ஷட்டரின், ஹீப்ளி தார்வாட் மத்திய தொகுதிக்கு மகேஷ் தெங்கின்காய் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

karnataka

Published by
செந்தில்குமார்

Recent Posts

இதுவரை 3.!கர்நாடகாவை தொடர்ந்து குஜராத்திலும் HMPV வைரஸ் தொற்று!

டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…

13 minutes ago

ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…

55 minutes ago

ஒரு அறிக்கை 2 கோரிக்கை : ஆளுநர் விவகாரமும், நேரடி ஒளிபரப்பும்… தவெக தலைவர் விஜய் பதிவு!

சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக  அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…

1 hour ago

“சிறுபிள்ளைதனமானது., ஆளுநர் ரவி ஏன் பதவியில் இருக்க வேண்டும்?” முதலமைச்சர் கடும் தாக்கு!

சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…

2 hours ago

பொங்கல் பண்டிகை: 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… எந்தெந்த ஊருக்கு எத்தனை பெருந்து இயக்கப்படுகிறது.?

சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…

2 hours ago

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

3 hours ago