கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மீதம் உள்ள இரண்டு தொகுதிகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை.
இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த 15 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் கர்நாடக சட்டப்பேரவை தொகுதிகள் 222 ஆக அதிகரித்துள்ளது. இதனால், அங்கு பெரும்பான்மை நிரூபிக்க 112 தொகுதிகளை தன்வசம் வைத்திருக்க வேண்டும், தற்போது ஆளும் பாஜக அரசு 106 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளது. ஆட்சியை தக்கவைக்க 6 இடங்களை கைப்பற்ற வேண்டும்.
தற்போதுள்ள நிலவரத்தின்படி, பாஜக 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், 1 தொகுதியில் மற்ற வேட்பாளரும் முன்னணியில் உள்ளன. மஜத கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னணியில் வரவில்லை.
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…
ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…
சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…