திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அப்போது, சுஷாந்தின் காதலி ரியா சக்ரபொர்த்தியின் செல்போனில் உள்ள வாட்ஸ் அப் உரையாடலில் போதைப்பொருட்கள் பயன்படுதியது தெரியவந்தது. இதனால், ரியா மற்றும் அவரது சகோதரர் சௌரி சக்ரபொர்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
போதைபொருள் விற்பனையாளரிடம், ரியா போதை பொருள் வாங்கி பயன்படுத்துகிறாரா? இல்லை வேறு யாருக்கும் கொடுத்துள்ளாரா? என்பது பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இருந்தாலும், இந்த நேரடி தொடர்பானது சுஷாந்த் சிங் வழக்கில் பெரும் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இதனையடுத்து, பாலிவுட் வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு நடிகர்களை நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து குற்றசாட்டி வருகிறார்.
இந்நிலையில், திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய மையப்புள்ளி கரண் ஜோஹர் தான் என்று கங்கனா ரனாவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டரில், திரைப்பட மாஃபியா கும்பலின் முக்கிய குற்றவாளி கரண் ஜோஹர் என்றும் பல உயிர்களையும், வாழ்க்கையையும் அழித்த பிறகும் கூட அவர் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார். அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்களுக்கு ஏதாவது நம்பிக்கை இருக்கிறதா? அனைத்தையும் முடித்துக் கொண்ட பிறகு, அவரும் அவரது ஹைனா கும்பலும் என்னை தேடி வரப்போகின்றன என்று கூறி, பிரதமரின் அலுவலகத்தை டேக் செய்தும் பதிவிட்டுள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…