‘துளிர் விட்ட இலை’… விண்வெளியில் நடந்த அதிசயம் – இஸ்ரோ மகிழ்ச்சி!

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டுடன் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்ட விதைகளில், இலைகள் துளிர்விட்டிருப்பதாக இஸ்ரோ கூறியுள்ளது.

ISRO PSLVC60

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) PSLV-C60 பயணத்தில், விண்வெளியில் விதையை முதலில் முளைக்க வைத்து, இலைகளை துளிர் விட செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. விண்வெளியில் தாவரங்கள் வளர்ப்பது குறித்து இஸ்ரோ ஆய்வு ஒன்றை இஸ்ரோ நடத்திருக்கிறது.

அட ஆமாங்க… பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய ஆராய்ச்சிக்கருவியில், பயிர் வளர்ப்பு சோதனை வெற்றியடைந்துள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் (PSLV C60 rocket) ஏவப்பட்டது.

POEM-4 தளத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டின் நான்காவது நிலை, 350 கிமீ உயரத்தில் 24 உள் சோதனைகளுடன் பூமியைச் சுற்றி வருகிறது. இப்பொது, விண்வெளியில் ‘PSLV சி60’ ராக்கெட்டில் காராமணி பயிர் துளிர்விட்டுள்ளது. ராக்கெட்டின் ஒரு பகுதியில் கிராப்ஸ் ஆய்வுக்கருவியில் காராமணி விதைகள் முன்னதாக முளைத்திருந்த நிலையில், தற்போது துளிர்விட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில், காராமணி (தட்டைப்பயிறு) செடியில் இலைகள் துளிர் விட்டுள்ளதாக இஸ்ரோ மகிழ்ச்சியோடு பதிவு செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்