ராஜஸ்தான் மாநிலத்தில் உருமாறிய கொரோனோவான கப்பா வைரஸ் 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வூஹான் பகுதியில் ஆரம்பித்த இந்த கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது இந்த கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா, லாம்டா, கப்பா என பல வகைகளில் உருமாற்றம் அடைந்துள்ளது.
இந்தியாவில் டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா தொற்றுகள் பரவி வரும் நிலையில் கப்பா வைரஸ்-ம் பரவ ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே உத்திரபிரதேசத்தில் இருவருக்கு கப்பா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் 11 பேருக்கு கப்பா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் ரகு சர்மா, இதுவரை ராஜஸ்தானில் 11 பேருக்கு உருமாற்றம் அடைந்த கப்பா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 8 பேர் ஆல்வார் மற்றும் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
மற்றவர்கள் பார்மர் மற்றும் பில்வாராவை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், டெல்டா வகை கொரோனாவுடன் ஒப்பிடும் பட்சத்தில் இந்த கப்பா வைரஸ் வீரியம் குறைந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…