உச்சநீதிமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய கருத்தை சுட்டிக்காட்டிய கபில் சிபல்!
உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பேசிய கருத்தை, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஆதார் வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், மேற்கோள்காட்டி வாதாடினார். நியூசிலாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தரவுகளை யாரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியுமோ, அவர்களே உலகத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று கூறினார்.
இந்நிலையில், ஆதார் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் பேசியதை சுட்டிக்காட்டியதுடன், இந்தியாவின் தரவுகளை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமோ, அவர்களே இந்தியாவை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் மாநில அரசு தனது உரிமையை பயன்படுத்த முடியாது என்று வாதிட்ட கபில் சிபல், தனி மனிதர்களின் விவரங்களை சிக்கலான நிலையில் வைத்திருக்க சட்டத்தில் இடமில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.