கன்னட மொழி மோசமான மொழி – மன்னிப்புக் கேட்ட கூகிள் நிறுவனம்!

Default Image

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடுதல் தளத்தில் காண்பித்ததால் கர்நாடக மாநிலத்தில் கண்டனம் எழுந்ததையடுத்து தற்போது கூகுள் நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மோசமான மொழி எது என கேட்டதற்கு கன்னடம் என்று கூகுள் தேடுதல் தளத்தில் கட்டப்பட்டதால், கர்நாடக மாநிலத்தினை சேர்ந்தவர்களும், கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், பாஜக பெங்களூர் எம்.பி. முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி அவர்களும்  தெரிவித்திருந்தனர்.

கர்நாடகத்தை சேர்ந்த பலரும் கூகுள் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பா அவர்கள், கூகுள் நிறுவனம் 2500 வருடங்கள் பழமை வாய்ந்த கன்னட மொழியை இழிவுபடுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்திற்கும் அதை சேர்ந்தவர்களுக்கும் பெருமையை ஏற்படுத்தக் கூடிய விஷயமாக உள்ள கன்னட மொழியை சிறுமை படுத்திய கூகுள் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனை அடுத்து தற்போது கூகுள் நிறுவன அதிகாரி ஒருவர் பேசுகையில், இது போன்று கூகுள் தேடுதல் தளத்தில் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் நடந்து விடுவதாகவும், கன்னட மொழி மோசமான மொழி என்பது கூகுளின் கருத்து இல்லை. இந்த சம்பவத்திற்காக கூகுள் நிறுவனம் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது எனவும், இப்பிரச்சனையை உடனடியாக சரி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்