போதைப்பொருள் தொடர்பாக நடிகை ராகினி திவேதியின் வீட்டிற்கே சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி போதை பொருள் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததற்காக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில் பெங்களூரில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட பலவகையான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாட்டை சேர்ந்த துணை நடிகை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரசியல் அதிகாரி ரவிசங்கர் என்பவர் நடிகர், நடிகைகளுக்கும் போதை பொருள் தரகராக வேலை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும், முன்னணி நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் போதைப்பொருட்களை பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவிசங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த சமயம் நடிகை ராகினி திவேதி இந்த கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நடிகை ராகினி திவேதிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியும், அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்த நிலையில், ராகினி திவேதியின் வீட்டிற்கே சென்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராகினி திவேதியிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…