உச்சநீதிமன்றம் மறுப்பு!கம்பாளா” எருதுவிரட்டுக்கு தடைவிதிக்க மறுப்பு…..
உச்சநீதிமன்றம் கர்நாடாகாவில் நடைபெறும் கம்பாளா எனப்படும் எருதுவிரட்டு விளையாட்டுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
கர்நாடாகாவில் கம்பாளா எனப்படும் எருதுவிரட்டு விளையாட்டு, ஜனவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையில் நடைபெறும். விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்த வழக்கில் கர்நாடாகா உயர்நீதிமன்றம் இந்த விளையாட்டுக்கு முன்னர் தடைவிதித்திருந்தது. இதையடுத்து, கம்பாளா எருதுவிரட்டை தொடர்ந்து நடத்தும் வகையில், கர்நாடக மாநில அரசு அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. கர்நாடக மாநில அரசின் இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து, பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு, கம்பாளா எருதுவிளையாட்டுக்கு தடைவிதிக்க முடியாது என மறுத்ததுடன், விசாரணையை அடுத்த மாதம் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.