இன்று கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.ஆனால் இந்த சமயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதில் சபாநாயகர் நர்மதா பிரசாத் 6 பேரின் ராஜினாமாவை ஏற்றார்.மீதமுள்ள 16 பேரின் ராஜினாமா இதுவரை ஏற்கப்படவில்லை.
இதற்கு இடையில் தான் ஆளுநர் லால்ஜி டாண்டன் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்குமாறு காங்கிரஸ் அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.ஆனால் மத்தியப்பிரதேச சட்டப்பேரவை கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற இருந்த கமல்நாத் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனில் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…