மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றார்.
போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா வசம் இருந்த ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியது. மத்திய பிரதேசத்தில், மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கமல் நாத், மூத்த தலைவர்கள் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, திக்விஜய்சிங் ஆகியோர் முதலமைச்சருக்கான போட்டியில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், திக்விஜய்சிங், கமல்நாத்துக்கு ஆதரவு தெரிவித்ததால், கமல்நாத் மற்றும் சிந்தியா இடையே போட்டி நிலவி வந்தது. பின்னர் போபாலில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், சிந்தியாவின் முழு சம்மதத்துடன், மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவிஏற்பு விழா நடைபெற்றது.இதில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக கமல்நாத் பதவி ஏற்றார். கமல்நாத்துக்கு ஆளுநர் ஆனந்தி பென்படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .கமல்நாத் 9 முறை எம்.பி.யாகவும் மத்திய தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். 72 வயதாகும் கமல்நாத் முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…