பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டியை மருத்துவமனையில் ஆட வைத்த சம்பவம்.! சர்ச்சையான அந்த வீடியோ…
இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல் பட்டு வந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு, கமலா பூஜாரிக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி இருந்தது.
அவர் சில நாட்களுக்கு முன்னர் சிறுநீரக பிரச்சனை காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டாக்நகரில் முக்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.
இவர் அண்மையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது, ஒரு சமூக ஆர்வலர் அந்த கமலா பூஜாரியை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன் நடனமாட கோரியுள்ளார். அவர் மருத்துவமனையில் இருந்து அப்போது தான் டிஸ்சார்ஜ் ஆனதால் கொஞ்சம் திணறி ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
ஒடிசாவின் பரஜா பழங்குடி சமூகத்தினர் இது குறித்து, ஐசியுவில் நடனமாட வைத்த அந்த சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளனர். .
#WATCH | Odisha: Ailing Padma Shri awardee Kamala Pujari allegedly forced to dance by a social worker in a hospital in Cuttack district
She was given Padma Shri in 2019 for organic farming
(Source: Viral video) pic.twitter.com/I2wJ7ykPXI
— ANI (@ANI) September 3, 2022