டெல்லி முதல்வருக்கு நன்றி தெரிவித்த கமலஹாசன்!

Default Image

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்களும் நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பெயரில் தமிழ் மொழி கலாச்சாரத்தை பரப்பும் வகையில் தமிழ் அகடமி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக டெல்லி தமிழ் சங்கத்தின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான என்.ராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் அகாடமிக்கான தனி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் விரைவில் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள். தமிழக மக்களுக்காக அரசு சார்பில் ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தமிழ் மக்களின் கலாச்சாரம், மொழி, கலை ஆகியவற்றை மற்ற மாநில மக்களும் உணரும் வகையில் தமிழ் அகடமி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முயற்சியை பாராட்டி, முதல்வர் பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் நன்றி தெரிவித்துள்ளதோடு மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் அவர்களும் நன்றி தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேமதுர தமிழுக்கு தலைநகரடெல்லியில் தமிழ் அக்கடமி அமைக்க ஆவணம் செய்த நண்பர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்