தேர்தல் விதிமுறைகளை மீறி பேசினார் கமல்ஹாசன்!தேர்தல் ஆணையத்தில் புகார்
தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் ஒன்றில் பேசுகையில், தீவிரவாதம் இருதரப்பிலும் உள்ளது. உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சைக்கு ஆளாகியது.
தற்போது தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. தரப்பு வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கமல் பிரச்சாரம் செய்ய 5 நாட்கள் தடை விதிக்க வேண்டும்.மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.