அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு – உ.பி.துணை முதல்வர் மௌரியா

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் அவர்கள், கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, நரம்பியல் பிரச்சினை காணப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் என பெயரிடப்படுவதாக உத்திரபிரதேச மௌரியா தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025