மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டதில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புராவில் 5 மாடி கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து இருந்த மக்கள் சிக்கியுள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த தேசிய மீட்பு படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர், தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் எத்தனை பேர் உள்ளே சிக்கியுள்ளார்களோ அவர்களுக்கு ஏன்னா ஆனதோ என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
முதலில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 3 மாடிகள் மட்டுமே இடிந்து விழுந்ததாம் அதனை அறிந்த மற்ற குடியிருப்புவாசிகள் அங்கிருந்து தப்பித்து வேறு பாதுக்காப்பான இடத்திற்கு சென்றுவிட்டனராம். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…