மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – என்ஜின் சோதனை வெற்றி!!
ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக விமானப்படையைச் சேர்ந்த 4 பேரையும் இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. அவர்களுக்கு பயிற்சி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவலால் இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ககன்யான் திட்ட விண்கலத்தில் பயன்படுத்த உள்ள விகாஸ் என்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதாவது, ககன்யான் திட்டத்திற்கான இயந்திர தகுதித் தேவைகளின் ஒரு பகுதியாக, மனித மதிப்பீடு செய்யப்பட்ட ஜி.எஸ்.எல்.வி எம்.கே.ஐ.ஐ வாகனத்தின் திரவ ஆற்றல் விகாஸ் என்ஜினின் சோதனை நடைபெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி ஆய்வகத்தில் 240 விநாடிகள் நடந்த இந்த என்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இறுதிக்கட்ட சோதனை ஒன்றரை மாதங்களில் நடைபெறும் எனவும் இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ககன்யான் திட்டத்தின் கீழ் புவியின் தாழ்வட்டப் பாதைக்கு மனிதர்களை அனுப்பும் வகையில் விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது.