கொரோனா காரணமாக உதரிபாகங்கள் வாங்குவது தாமதமாகியுள்ளதால் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவிப்பு.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளித் துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தொடர்ந்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டதிக்கு ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு, சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விண்வெளியில் தாழ்வான நிலையிலிருந்து பூமியை 7 நாட்கள் சுற்றிவரும் வகையில் ககன்யான் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ககன்யான் விண்கலத்தில் பயன்படுத்தப்பட உள்ள திரவ எரிபொருள் நிரப்பிய விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றிகரமாக நிறைவேறியது என கூறப்பட்டது. அதுவும், தமிழகத்தில் நெல்லையிலுள்ள காவல்கிணறு மகேந்திரகிரியின் இஸ்ரோ மையத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்த திட்டத்திற்காக 4 வீரர்களை இஸ்ரோ தேர்வு செய்தது. தற்போது அவர்கள் 4 பேரும் ரஷியாவில் பயிற்சியில் உள்ளனர். முதற்கட்ட சோதனையாக இந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆளில்லா ராக்கெட்டை பூமிக்கு அனுப்பி சோதனை நடத்தப்படும் என்றும் 2-வது ஆளில்லா ராக்கெட்டை 2022-2023-ம் ஆண்டுக்குள் அனுப்பி சோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.
இந்த நிலையில், கொரோனாவால் உதரிபாகங்கள் வாங்குவது தாமதமாகியுள்ளதால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இந்தாண்டு டிசம்பர் மாதம் விண்வெளிக்கு ககன்யான் விண்கலம் செலுத்தப்பட இருந்த நிலையில், தற்போது இது சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனாவால் பல மாநிலங்கள், நாடுகளில் ஊரடங்கு விதிக்கப்பட்ட காரணமாக வன்பொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ககன்யான் திட்டம் வடிவமைப்பு, ஆவணங்கள் இஸ்ரோவால் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான தொழில்துறையிடம் இருந்து ககன்யானுக்கான வன்பொருள் (உதரிபாகங்கள்) வாங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…