கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றிய கே. கே. ஷைலஜா.! ஐ. நா. சபை பாராட்டு.!

Default Image

கேரளாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட பணியாற்றிய சுகாதார துறை அமைச்சரான கே. கே. ஷைலஜாவிற்கு ஐ. நா. சபை பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது. சில இடங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தியும் வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திறம்பட கையாண்ட கேரள சுகாதார அமைச்சரான கே. கே. ஷைலஜாவை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை ஐக்கிய நாடுகள் சபை பொது சேவை தினத்தை கொண்டாடிய து. அதில் ஐ. நா. பொதுச் செயலாளர் அன்டோனியா குடெரெஸ் மற்றும் ஐ. நாவின் உயர்மட்ட பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். அதில் கேரள சுகாதார துறை அமைச்சரான கே. கே. ஷைலஜா அவர்களும் கலந்து கொண்டார். இதனையடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கேரள சுகாதார துறை அமைச்சரான கே. கே. ஷைலஜா திறம்பட பணியாற்றியதற்காக ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது. அந்த விழாவில் பேசிய கே. கே. ஷைலஜா கூறியதாவது, நிபா வைரஸ் மற்றும் 2018,2019ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார துறை ஒரு முக்கிய பங்கு கொண்டிருந்தது. அந்த அனுபவங்கள் தான் கொரோனாவை சரியான நேரத்தில் சமாளிக்க உதவியது என்று கூறினார். ஹவானில் கொரோனா தொற்று பரவி தொடங்கிய காலத்திலிருந்து கேரள சுகாதார துறை அமைப்பு தடுப்பதற்கான ஒவ்வோரு வழிமுறைகளையும் பின்பற்ற தொடங்கியது. அதனாலயே கொரோனா வைரஸை 12.5 சதவீதத்திற்கு கீழ் வைக்க முடிந்ததாகவும், இறப்பு விகிதம் 0.6% ஆக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்