‘சைக்கிள் பெண்’ என்றழைக்கப்பட்ட ஜோதி என்பவரின் தந்தை மாரடைப்பு காரணமாக காலமானார்.
மோகன் என்பவர் டெல்லியில் பல ஆண்டுகளாக ரிக்ஷா வண்டி ஓட்டி வந்தார்.இதற்கிடையில்,கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு போடப்பட்டதை தொடர்ந்து தனது ரிக்ஷாவை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பின்னர் அவர் வேலையில்லாமல் இருந்தார்.முன்னதாக அவர் காலில் காயம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அவரது 16 வயது மகளான ஜோதி,தனது தந்தையை கவனித்துக்கொள்வதற்காக டெல்லிக்கு சென்றார்.கடுமையான பணப் பற்றாக்குறையை எதிர்கொண்ட ஜோதி மற்றும் அவரது தந்தை மே 10 அன்று டெல்லியில் இருந்து ரூ.500 க்கு சைக்கிள் வாங்கிய பின்னர்,பீகாரின் தர்பங்காவிலுள்ள தனது வீட்டிற்கு சைக்கிள் மூலமாக செல்ல 1,100 கி.மீ தூரத்திற்கு,ஆபத்தான பயணத்தைத் தொடங்கினர்.பிறகு,மே 16 அன்று அவர்கள் தங்கள் கிராமத்தை அடைந்தனர்.இதன்காரணமாக,அனைத்து தலைப்புச் செய்திகளிலும் “சைக்கிள் பெண்’ என்று அழைக்கப்பட்டு ஜோதி மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில்,ஜோதியின் தந்தைக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டது.இதனையடுத்து,மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பே அவர் காலமானார்.
இதனைத்தொடர்ந்து,ஜோதியின் தந்தை மோகனின் மறைவுக்கு தர்பங்கா மாவட்ட நிர்வாகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…