#BREAKING : காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார்

பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்தார் ஜோதிராதித்யா சிந்தியா.
மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கும் கமல்நாத்திற்கும் இடையே பனிப்போர் நிலவி வந்தது. இதற்கு இடையில் மத்தியபிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை சந்தித்தார்.பின்னர் ஜோதிராதித்யா சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இவரது ராஜினாமாவை காங்கிரஸ் கட்சியும் ஏற்றது.
இதற்கு இடையில் மத்திய பிரதேசத்தில் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.இதனால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா பாஜக தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் இணைந்தார் .சிந்தியாவிற்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார் ஜே.பி.நட்டா
லேட்டஸ்ட் செய்திகள்
“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!
April 19, 2025