மாநிலங்களவை வேட்பாளராக பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு
பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.