#Justnow:ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை;குப்பைகளை சேகரித்த பிரதமர் மோடி!
டெல்லியில் பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னதாக தொடங்கி வைத்தார்.பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு தொந்தரவின்றி,சுமூகமான போக்குவரத்து அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
Delhi | PM Narendra Modi inaugurates Pragati Maidan Integrated Transit Corridor project
The project built at a cost of more than Rs 920 crores aims to provide hassle-free and smooth access to the exhibition and convention centre being developed at Pragati Maidan. pic.twitter.com/qm1Pwf2F9z
— ANI (@ANI) June 19, 2022
1.36 கிமீ நீளம் கொண்ட இந்த ஐடிபிஓ சுரங்கப்பாதையில் இருபுறமும் மூன்று வழிப்பாதையுடன் ஆறு வழித்தடங்கள் இருக்கும்.இது ரிங் ரோட்டை இந்தியா கேட் உடன் புரானா கிலா சாலை வழியாக பிரகதி மைதானம் வழியாக இணைக்கிறது.இது பிரகதி மைதானத்தின் பெரிய அடித்தள பார்க்கிங்கிற்கும் நேரடி இணைப்பை வழங்கும்.இதனால் 1 லட்சம் பயணிகளுக்கு போக்குவரத்து எளிதாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில்,டெல்லியில் பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, சுரங்கப்பாதையில் குப்பைகளை சேகரிக்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Prime Minister Narendra Modi picks up litter at the newly launched ITPO tunnel built under Pragati Maidan Integrated Transit Corridor, in Delhi
(Source: PMO) pic.twitter.com/mlbiTy0TsR
— ANI (@ANI) June 19, 2022