எஸ்எஸ்சி ஊழல் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி 2 நாள் அமலாக்கத்துறை ரிமாண்ட்.
மேற்கு வங்க வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று கைது செய்திருந்தது. பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டது. இந்த ஊழல் நடந்தபோது மாநில கல்வி அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி, சுமார் 26 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தகுந்த நேரத்தில் அறிக்கையை வெளியிடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறினார். சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதற்கு முன்பு அமலாக்கத்துறை சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும் என்று சபாநாயகர் பிமன் பானர்ஜி தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை அல்லது சிபிஐ, எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை கைது செய்யும் போது, லோக்சபா அல்லது சட்டசபை சபாநாயகரிடம் தெரிவிக்க வேண்டும். இது அரசியலமைப்பு விதிமுறை.
ஆனால் சட்டர்ஜியின் கைது குறித்து ED யிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும், ஊழல் தொடர்பான வழக்கு சோதனையின்போது அர்பிதா முகர்ஜி வீட்டில் சுமார் ரூ.21 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. மேலும், 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் தொடர்பான ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன, அதற்கான உரிய ஆவணங்கள் கிடைக்கவில்லை. அதாவது அவரிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளின் மொத்தத் தொகை சுமார் ரூ.80 லட்சம் என தெரிவிக்கின்றன. இதனிடையே, இன்று கைதான பார்த்தா சாட்டர்ஜி, சால்ட் லேக்கில் உள்ள CGO வளாகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்பிறகு, கொல்கத்தாவில் உள்ள பாங்க்ஷால் நீதிமன்றத்தில் பார்த்தா சாட்டர்ஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில், எஸ்எஸ்சி ஊழல் தொடர்பாக உதவியாளர் வீட்டில் 21 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டதை அடுத்து, மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி 2 நாள் அமலாக்கத்துறை ரிமாண்டிற்கு அனுப்பப்பட்டார். ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. எதிர்க்கட்சியான பாஜக ஏற்கனவே முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி வரும் நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டிருப்பது பேசும் பொருளாக மாறியுள்ளது.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…